நாம் பிறந்த மண்ணை எப்பொழுது பார்ப்பது ?
திரும்பிப்பார்க்கிறேன். ஓட்டம் ஓட்டம் - எப்பொழுதும் ஓட்டம் தான்.
ஒன்று கிடைத்தால் மற்ற ஒன்றுக்கு ஓட்டம் . அது கிடைத்த பின் வேறு ஒன்றுக்கு ஓட்டம். இப்படி வாழ்வின் இளமைப்பருவம் முழுவதும் வேகமாக ஓடி இங்கு வந்தது சேர்ந்தாகி விட்டேன். இனி திரும்பிப்பார்த்தால் ஏன் இந்த ஓட்டம் என்று புரியவில்லை.
பிறந்த்த நாட்டை நன்கு பார்த்து ரசிக்கவில்லை. வாழ வைக்கும் மேல் நாட்டை இன்னும் சரியாக பார்க்கவில்லை.
வாழ்வது ஒருமுறை. அதை சரியாக வாழ ஆவல். சரியாக வாழ முயல்வோம்.